எரிபொருள் பற்றாக்குறையால் அல்லாடும் நியூசிலாந்

New Zealand's fuel shortage hits more flights and petrol stations

நியூசிலாந்தில் மிகப்பெரிய எரிபொருள் விநியோக நிறுவனமான ‘இசட் எனர்ஜி’ நிறுவனத்தின் எரிபொருள் விநியோக குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந் ராணுவமும் சிங்கப்பூர் ராணுவமும் இணைந்து மேற்கொள்ளவிருந்த பயிற்சி இதனால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் ஜெட் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி எரிபொருளில் ஓடும் கார்களும் தடை செய்யப்பட்டுள்ளது, மேலும் அரசு அதிகாரிகள் தேவையற்ற விமான பயணத்தை தவிர்க்க வேண்டுமெனவும் கூறியுள்ளனர். நியூசிலாந்தில் வரும் 23ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது இது ஆளும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளனர்.

Tagged with:     ,