நைஜீரியா மசூதியில் குண்டுவெடிப்பு 50பேர் பலியாகினர்

bomb blast

நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள அடமாவா மாநிலத்தில் முபி நகரில் உள்ள மசூதி ஒன்றில் பயங்கரவாதிகளால் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் அடமாவா பகுதியை, “போகோ ஹராம்” பயங்கரவாதிகள் 2014-ம் ஆண்டு கைப்பட்டிறினர். அதனை அடுத்த ஆண்டே அதாவது 2015-ம் ஆண்டு நைஜீரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியது. போகோ ஹராம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இதுவரை 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

bomb blast

சமீபகாலமாக அமைதி நிலவிவரும் இந்த நிலையில் தற்பொழுது அடமாவாவில் இருக்கும் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தியுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர், மேலும் சிலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றர். அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மசூதிக்கு வந்த இளைஞர் ஒருவர் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்காததால் ‘போகோ ஹராம்’ அமைப்பு தான் இதை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tagged with:     , ,