கருப்பன் பட காளை பிரச்சினை நடிகர் விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ்

திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதி பகுதியை சேர்ந்தவர் காத்தான். இவர் தமிழ்நாடு வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் மாவட்ட செயலாளாராக உள்ளார்.

கருப்பன் திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு காளையை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு காளையின் உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் `கருப்பன்’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் ஒரு காட்சியில் கொம்பன் மாட்டினை விஜய் சேதுபதி திமிலை பிடித்து அடக்குவது போல் படத்தின் முன்னோட்ட காட்சியில் வெளியாகி உள்ளது.

இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கொம்பன் காளையை அடக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு ரூ 10.லட்சம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிஉள்ளார்.