பீரை போடு…காரை ஓட்டு…இனி சாலைகளில் ஓடும் பார்

car with beer

பீரை போடு…காரை ஓட்டு…என்று இனி நடந்தாலும் ஆச்சிரியமில்லை. மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது என்பது சட்டம். ஆனால் மதுவை ஊற்றி காரை ஓட்ட முடியும் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என அனைத்து வாகனங்களுக்கும் போடப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே இதற்க்கு மாற்று எரிபொருள் தாயாரிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் பதிலாக பீர் ஊற்றி காரை இயக்கலாம் என்ற ஆராய்ச்சில் ஈடுப்பட்டு வெற்றிப்பெற்றுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியது என்ன?

பீர் தயாரிக்கும் பொழுது அதில் ஒருசில மூலப்பொருட்கள் கலந்தால் அதில் இருக்கும் எத்தனால் பியூட்டனலாக மாறும். அதன் பிறகு அந்த திரவத்தை காருக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளனர். இது சோதனை முறையில் வெற்றி பெற்றுள்ளது.

பீரில் இருக்கும் எத்தனால் பியூட்டனலாக மாற சில கால அவகாசம் தேவைப்படுகிறது. அது அதிகமாக இருப்பதால் அந்த கால அவகாசத்தை குறைக்கும் ஆராய்ச்சில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே வெகுவிரைவில் பீரில் ஓடும் கார் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி.