ஓட்டுநர் உரிமம் கேட்டு சாலை நடுவில் வாகன ஓட்டிகளை மறிக்க தடை

original licence checking in middle of the road is banned

சென்னையில் போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளை மறித்து அவர்களிடம் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாங்கி கொண்டு மிரட்டி பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்-க்கு மக்களிடமிருந்து புகார் வந்துள்ளது.

இது குறித்து நேற்று வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடந்தது. அதில் இனி ஓட்டுநர் உரிமம் கேட்க சில விதிமுறைகள் வழங்கப்பட்டன, அதில் சில ‘போதையில் வாகனம் ஓடுதல், அதிவேகம், அதிகம் பாரம் ஏற்றுதல், சிக்னல் விதிமீறல்’ இதுபோன்ற குற்றச்சாட்டில் சிக்குவோருக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் கேட்டு அதனை ரத்து செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார். இதனை மீறும் போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.