இடம் மாறுகிறது பாக்கிஸ்தான் ராணுவ தலைமையகம்

pakistan Army Headquarters

பாக்கிஸ்தான் தனது ராணுவ தலைமையகத்தை மாற்ற முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ராவல்பிண்டியில் சில ஆண்டு காலமாகவே இருந்து வந்தது. தற்பொழுது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால் பாக்கிஸ்தான் ராணுவ தலைமையகத்தை ராவல்பிண்டியிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு மாற்ற முடிவெடுத்துள்ளன. இந்த மாற்று பணிக்காக 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என பாதுகாப்பு நாடாளமன்றக்குழு தலைவர் ‘ஜமிருள் ஹசன்’ தெரிவித்துள்ளார்.

தலைமையகம் அமைப்பதற்காக இஸ்லாமாபாத்தில் 2ஆயிரத்து 450ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராணுவ தலைமையகத்தை இடம் மாற்றுவதை குறித்து பாக்கிஸ்தான் 57 ஆண்டுகளாக பரிசீலித்து வருகிறது.

Tagged with:     , ,