பாகிஸ்தானில் இஸ்லாத்தை அவமதித்த நபருக்கு தூக்கு

pakistan govt punished christian

பாகிஸ்தானில் இஸ்லாத்தை அவமதித்து வாட்ஸ் அப்பில் செய்திகளை பரப்பிய நபருக்கு அந்நாட்டின் அரசு தூக்கு தண்டனை விதித்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த நதீம் ஜேம்ஸ் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வாட்ஸ் அப்பில் இஸ்லாமியரின் புனிதராக கருதப்படும் முகம்மது அவர்களை கேலி செய்யும் வகையில் செய்திகளை பரப்பினார். இந்நிலையில் தனது நண்பர் என்று கருதாமல் இஸ்லாத்தை கேலி செய்ததற்காக யாசிர் பாஷா என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இஸ்லாத்தின் சட்ட படி அதன் தலைவர்கள் மற்றும் புனிதநூலை கேலி செய்தால் தண்டனை விதிக்க வேண்டும் என்ற சட்டமுள்ளது. அதன் அடிப்படையில் இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை பரப்புவோர் கண்காணிக்க படுகின்றனர்.