பானசோனிக் நிறுவனத்தின் புதிய நகரும் குளிர்சாதனப்பெட்டி

panasonic movable fridge sake cooler

உணவுகளை வீணாக்காமல் வைத்துக்கொள்ளவும் உணவுகளை பிரெஷாக வைத்துகொள்ளவும் குளிர்சாதனப்பெட்டி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நாம் இருக்கும் இடத்திற்கே நகர்ந்து வரும் குளிர்சாதனப்பெட்டியை பானசோனிக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதற்க்கு ‘கு’ என்று பெயர் சுட்டியுள்ளது. LIDAR சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் கண்டிபிடித்துள்ள தானியங்கி கார்களிலும் இதே தொழில்நுட்பம் தான் பயன் படுத்தியுள்ளனர். ஒரு குழந்தையை அழைப்பது போல ‘கு’ என்று அழைத்தாள் நாம் இருக்கும் இடத்திற்கே நகர்ந்து வரும் இடையிலேயே ஏதும் தடைகள் இருந்தால் அதனை கடந்து வரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதில் குரல் வலி தொழில்நுட்பம் பயன்படுத்தியுள்ளதால் யார் அழைத்தாலும் அழைத்த இடத்திற்கு வரும் என குறிப்பிட்டுள்ளனர். இதற்க்கு சந்தையில் அதிகம் வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

Tagged with:     , ,