பென்டிரைவ் தயாரிப்பின் முன்னணி நிறுவனமான கிங்ஸ்டன்(Kingston) பாஸ்வேர்டுடன் புதிய பென்டிரைவ் அறிமுகம் செய்துள்ளது.
டேட்டா டிராவலர் 2000(Data Traveler 2000), யுஎஸ்பி 3.1 என்ற பென்டிரைவ்களில் ஆல்பா நியூமரிக் கீபேட் உள்ளது.இதன் மூலம் நாம் பென்டிரைவ்களை லாக் செய்து கொள்ள முடியும்.இதனால் மற்றவர்களிடமிருந்து நமது பென்டிரைவ்-ல் உள்ள கோப்புகளை பாதுகாத்து கொள்ள முடியும்.
மேலும் இந்த வகை பென்டிரைவ்களில் AES 256 bit என்கிரிப்ஷன் உள்ளதால் டேட்டாக்களில் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது.DT 2000 வகை பென்டிரைவ்கள் FIPS 197 சான்றிதழ் பெற்றுள்ளன.
இவை எந்த வகை சாதனங்களிலும் USB 2.0 அல்லது USB 3.1 போர்ட் வசதியுடன் பயன்படுத்த முடியும். மேலும் DT 2000 பென்டிரைவ்கள் 16GB மற்றும் 32GB சேமிப்பு திறன் வசதியுடன் கிடைக்கின்றன.இதன் விலை மாடலுக்கு ஏற்ப 10 முதல் 18 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பென்டிரைவ்களில் உள்ள கோப்புகளை என்கிரிப்ட் பன்ன முடியும் என்றாலும் இது போன்ற லாக் வசதி அனைவரும் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.