இனி பெட்ரோல் டீசல் ஆன்லைனில் கிடைக்கும்

petrol and diesel available on online

இனி ஆன்லைனில் ஆடர் செய்தால் போதும் பெட்ரோல் டீசல் வீடு தேடி வரும். நம் நாட்டை டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இனி வீட்டில் இருந்து கொண்டு ஆடர் செய்தால் போதும் பெட்ரோல் வீடு தேடி வரும் என கூறியுள்ளார்.

முன்பாகவே பணம் பரிமாற்றம், டிக்கெட் புக்கிங், மின்சார வரி செலுத்துதல் போன்ற பல வற்றை ஆன்லைன் மூலம் செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்படுள்ளது இந்த வரிசையில் தற்பொழுது பெட்ரோல் மற்றும் டீசல் சேர்ந்து விட்டது. இனி நம் உட்காந்த இடத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் பெற்று கொள்ளலாம். நம் நாடு டிஜிட்டல் இந்தியா நோக்கி முன்னேறி வருகிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆன்லைன் மூலம் பெட்ரோல் டீசல் வழங்கும் திட்டம் கூடிய விரைவில் அமலுக்கு வரும் என்ற பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.