ப்ளே பாய் நிறுவனர் ஹெப்னர் மரணம் அடைந்தார்

playboy founder dead

அமெரிக்காவில் ப்ளே பாய் இதழின் நிறுவரான ஹெப்னர் தனது 91ம் வயதில் மரணம் அடைந்தார். இதுகுறித்து ப்ளே பாய் இதழில் வெளியிட்டுள்ள செய்தி என்னவென்றால், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தனது சொந்த வீட்டில் வயது முதுமையின் காரணமாய் மரணம் அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளனர். இவர் 1953ம் ஆண்டு தனது சமையல் அறையிலிருந்து தனது இதழை ஆரம்பித்தார் பின்பு அது உலகம் முழுவதும் அதிகம் விற்பனையாகும் ஆண்களின் இதழாக உருமாறியது.

அதிகபட்சமாக ஒரே மாதங்களில் 70லட்சம் பிரதிகள் விற்றுத்தீர்ந்திருக்கின்றன. பின்பு ஹெப்னர் தனது அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த மாடல் மங்கைகளையே திருமணம் செய்து கொண்டார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தன்னிடம் நட்பாக இருந்ததாக தெரிவித்து உலகையே வியக்கவைத்தவர். தனது முதல் இதழிலேயே மெர்லின் மண்ரோவின் புகைப்படத்தை இதழின் அட்டைபடமாக வைத்து அனைவரையும் தன பக்கம் திரும்ப வைத்தவர்.தனது 86வயதிற்கு பின்பு அவர் அதிகமாக வெளியில் தலைகாட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tagged with:     ,