தமிழகத்தில் தொடரும் நீட் போராட்டம்

protest continuously going on tamilnadu

சென்னையில் நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கே காவல்துறை அதிகாரிகள் அவர்களை விரட்ட முயன்றபொழுது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டன.

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்க்கு நீதி கிடைக்காமல் போராட்டத்தை கைவிட போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் அதற்க்கு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் அந்த இடத்தில் பதற்றம் நிலவியது பொதுமக்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அங்கே காவல்துறை அதிகாரிகள் அவர்களை விரட்ட முயன்றபொழுது துணை முதல்வர் ஓ பன்னிர்செல்வம் உட்க்கார்ந்து தியானம் செய்ய இடமுண்டு நாங்கள் அமைதியாக உட்காந்து போராட தடையா என்ற கேள்வியை எழுப்பினர்.

சென்னை மெரினா மட்டுமின்றி பல்வேறு கல்லுரிகளில் தொடர் போராட்டம் நடந்துவருகின்றன.