டொனால்ட் டிரம்பின் அதிரடி முடிவால் வெள்ளை மளிகை முன்னே போராட்டம்

protest going on near white house due to donald trump sudden rule

அமெரிக்க அதிபரான டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் 8லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அது என்னவென்றால் அமெரிக்காவிற்கு சிறுவயதிலே சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகை ரத்து என குறிப்பிட்டுள்ளார். ஒபாமா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டத்தால் அமெரிக்காவின் கல்வி வேலைவாய்ப்பு பாதிப்பு அடைகிறது இதனால் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகையை ரத்து செய்வதாக கூறியுள்ளார்.

டிரம்பின் இந்த அதிரடி முடிவால் 8லட்சத்திற்கு மேலான இளைஞர்கள் பாதிக்க படுகின்றனர். இது குறித்து இவர் தேர்தல் பிரச்சாரத்திலேயே கூறியுள்ளார். இன்று ஆட்சிக்கு வந்தபிறகு நடவடிக்கை எடுத்துள்ளார். ஒபாமா ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தால் இன்று வளர்ந்து பெரியவர்கள் ஆனபின்னும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சலுகைகள் வழங்கப்படுகின்றன அதை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடுகிறார்.

டொனால்ட் டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பால் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதனை கண்டித்து வாஷிங்டனில் வெள்ளை மளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.