இன்றுமுதல் அடுத்த 5நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அக்டோபர் 30 முதல் நவம்பர்3 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 30ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும். அக்டோபர் 31ம் தேதி முதல் தமிழகம் , புதுச்சேரி, கேரளா, ஆந்திராவின் கடலோர பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.