சென்னையில் பல இடங்களில் இன்றும் கனமழை கொட்டி தீர்க்கின்றது. நேற்று பிற்பகல் துவங்கி இரவு முழுவதும் மழை கொட்டி தீர்க்கின்றது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிகபட்சமாக தரமணியில் 19செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இன்றும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை தரமணியில் 19செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 18செ.மீ, அண்ணா பல்கலையில் 15செ.மீ, மீனம்பாக்கத்தில் 14செ.மீ, புழலில் 9செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு அடைந்துள்ளது. சில பகுதிகளில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவம் தகவல்கள் வெளியாகிவுள்ளன. மேலும் 24மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.