ஜியோ அசத்தல் சலுகை – ரூ.1,999க்கு ஐபோன்

iphone x on jio

ஜியோ என்றாலே சலுகை தான்டா என்ற எண்ணம் தற்பொழுது மக்கள் மனதில் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு ஜியோ நிறுவனம் சலுகையை வாரி வாரி வழங்கி வருகிறது. தற்பொழுது ஒரு புதிய சலுகை ஒன்றினை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

iphone x on jioஐபோன் x வாங்கினால் புதிய பைபேக் (buyback)சலுகை வழங்கவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ போன் என்ற ஒன்றை அறிமுகம் செய்து அதை முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்த பொழுது அதற்கான வரவேற்பை அதிக அளவில் பெற்றுள்ளது. இரண்டே நாட்களில் ஆறு மில்லியன் நபர்கள் ஜியோ போன் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து தற்பொழுது ஐபோன் x வாங்குவதற்கு ரூ.1,999 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளாலாம் என்று அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம்.

iphone x on jio

எங்கு வாங்குவது?

ரிலையன்ஸ் ரீடெய்ல் ஷாப், ஜியோ வலைத்தளம், மை ஜியோ செயலி அல்லது அமேசான் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

சலுகை நாட்கள்?

இந்த சலுகை செப்டம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை செல்லுபடியாகும். குறிப்பிட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தினால் அதற்க்கு கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படும்.

கால அவகாச குறிப்பு:

ஐபோன் x வாங்கி ஒரு வருடம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கும் பொழுது 70% பைபேக் (buyback) சலுகை பெறமுடியும். இந்த பைபேக் சலுகை பெருவதற்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக ரூ.799க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.