வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க தேவையில்லை – ரிசர்வ் வங்கி அதிரடி

reserve bank of india announced that its not mandatory to link aadhar

சில மாதங்களுக்கு முன்பு சில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருந்தது. வங்கி கணக்கு, பான் கார்டு , ஓட்டுநர் உரிமம் , போன் நம்பர் இப்படி அனைத்துடனும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க டிசம்பர் 31வரை கால அவகாசத்தை வழங்கியுள்ளது. இல்லையெனில் வங்கி கணக்கு மூடப்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு செய்தி இணயதளம் , தகவல் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் ஒரு கேள்வி ஆதார் இணைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு ரிசர்வ் வங்கி கூறியுள்ள விளக்கம் என்னவென்றால் வங்கி கணக்குடன் ஆதார் ஏன் இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சட்ட விரோத பணம் பரிமாற்றத்தை கண்காணிக்கவே மத்திய அரசு ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கும் ரிசர்வ் வங்கிக்கும் எவ்வித தொடரபும் இல்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

எனவே, வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க வேண்டும் என்ற திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசுடையது என தெரியவந்துள்ளது.