இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்க முடிவெடுத்துள்ளது பி.சி.சி.ஐ ரோஹித் சர்மா தான் இனி இந்திய அணியின் கேப்டன்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவுடன் விளையாட இருக்கின்றது.
அடுத்தடுத்து தொடர்ச்சியாக விளையாடி வருவதால் இந்திய அணி வீரர்கள் களைப்பு அடைந்து விட்டால் அது ஆட்டத்தின் வெற்றியை பாதிக்கும் என எண்ணி இந்த இரு தொடரில் இந்திய அணியில் மாற்றம் கொண்டுவர முடிவெடுத்துள்ளது பி.சி.சி.ஐ.
அதனடிப்படையில் இலங்கை தொடருக்கு புஜாரா, அஸ்வின், சாகா, முரளி விஜய் ஆகியோர் களம் இறக்கப்படலாம் ரஹானே, தவான், பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என செய்திகள் வெளிவந்துள்ளது. இதுபோல இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சில போட்டிகளுக்கு ஓய்வு வழங்கி ரோஹித் சர்மாவை கேப்டனாக்க முடிவெடுத்துள்ளது பி.சி.சி.ஐ.