‘ரோட்டா’ சொட்டு மருந்து 6ம் தேதி முதல் வழங்கப்படுகிறது

rotta polio vaccine

தமிழகத்தில் வரும் 6ம் தேதி முதல் வயிற்றுப்போக்கை தடுக்க ‘ரோட்டா’ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தி 406மையங்களில் இந்த ரோட்டா சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. குழந்தைகளின் வயிற்றுப்போக்கை தடுக்க இந்த வைரஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு எந்த விளைவுகளும் வாராது என்பதையும் தெரிவித்துள்ளனர்.

இதனை மூன்று தவணையாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஒன்றரை மாதத்திற்கு முதல் தவனையும், இரண்டரை மாதத்திற்கு இரண்டாவது தவனையும், மூன்றரை மதத்திற்கு மூன்றாவது தவனையும் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை முதல் தவணையிலுருந்தே செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஒன்றரை வயது குழந்தைகளுக்கு செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளனர்.

இதற்க்கு மற்ற தனியார் மருத்துவமனையில் 850ரூ முதல் 1000ரூ வரை வசூலிக்க படும் என தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் இதனை இலவசமாக வழங்குகின்றனர்.