ரூபாய் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

காட் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் பிரபு சாலமன் தயாரித்துள்ள படம் ‘ரூபாய்’. இந்த படத்தை சாட்டை படத்தின் வெற்றி இயக்குனர் அன்பழகன் இயக்கியுள்ளார். படத்தின் நாயகனாக கயல் சந்திரன், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர் . இவர்களுடன் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரிஷ் உத்தமன், ஆர் என் ஆர் மனோகர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு வீ இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வரும் ‘ரூபாய்’ படம் பற்றி இயக்குனர் அன்பழகன் சில விஷயங்களை கூறினார். பணம் எல்லோருக்கும் அவசியம் தான். அது போதுமானதாகவும் நியாயமான முறையில் சம்பாதித்தால் அது மனத்திற்கு சந்தோசத்தை தரும். அதுவே நியாயமற்ற முறையில் பெற்றால் அது நிறைய சங்கடங்களையும் துன்பங்களையும் தரும் . பணத்தின் அருமையும் அதன் முக்கியத்துவமும் நிறைந்தது தான் ‘ரூபாய்’ படத்தின் சிறப்பு என்று இயக்குநர் அன்பழகன் கூறியிருக்கறார்.

ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட போது 500,1000 ரூபாய் செல்லாது என்ற பிரச்சனையின் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின் பல பிரச்சனைகளை கடந்து தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் 14 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெள்ளியன்று ரூபாய் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிக்கை வெளியுட்டுள்ளனர்.