இன்றய தொழில்நுட்ப காலகட்டத்தில் பல விஞ்ஞானிகள் புதிதுபுதிதாக பைக், கார் என பல வசதிகளை உள்ளடக்கியவாரு தயாரிக்கின்றனர். அந்த வகையில் இப்போது பறக்கும் பைக் என்ற ஒன்றை ரஷ்யா விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர்.
இந்த பைக்கை ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் பார்த்திருக்கமுடியும். பறக்கும் சக்தி கொண்ட இந்த ஹோவர் பைக் (Hover Bike) என்ற பைக் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது என்று கூறினால் அது மிகையாகாது. அதன் பின்புதான் ரஷ்ய விஞ்ஞானிகள் அதே போல பறக்கும் சக்தி படைத்த பைக்கைத் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆராய்ச்சியைத் தொடங்கினர்.
அவர்களது இந்த ஆராய்ச்சியின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் ஸ்கார்பியன் 3 ஹோவர் பைக் (Scorpion 3 Hover Bike) என்ற பறக்கும் பைக்கை தயாரித்துள்ளனர். இந்த பைக்கில் ஒரு நபர் மட்டுமே பயணிக்க முடியும். மேலும் தரைமட்டத்திலிருந்து 33 அடி உயரத்தில் 30 மைல் தொலைவுக்கு பறக்கும்.
இந்த ஸ்கார்பியன் 3 ஹோவர் பைக்கின் பறக்கும் சோதனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இருந்தாலும் இதன் பாதுகாப்பு அம்சங்களை உறுதிசெய்து கொள்ள மேலும் சில சோதனைகளைச் செய்ய உள்ளதாக இதனை வடிவமைத்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.