இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வசிக்க ஏற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளன. அதில் தமிழ்நாடு 11வது இடத்தை பிடித்துள்ளது. பிளான் இந்தியா என்ற அமைப்பு பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு, உடல்நலம், கல்வியறிவு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையை கொண்டு ஒரு பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளன. அதில் கோவா முதல் இடத்தை பிடித்துள்ளது. கேரளா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர் ஆகிய இடங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் தமிழ்நாடு 11வது இடத்தை பிடித்துள்ளது. கடைசி மூன்று இடங்களில் டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன