புனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் அடுத்த சுற்றுக்கு இந்திய வீரர்கள் சாகேத் மைனேனி, ஸ்ரீராம் பாலாஜி ஆகிய இருவரும் தங்களது அசத்தலான ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
புனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் உடல் ரீதியான பிரச்சனை காரணமாக இந்த சீசனில் தடுமாறிய சாகேத் மைனேனி தனக்கு அளிக்கப்பட வைல்ட் கார்டு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியின் தொடக்க சுற்றில் போஸ்னியா வீரரான டொமிஸ்லாவ் பிரிகிசுடன் மோதினார் சாகேத் மைனேனி . அந்த ஆட்டத்தில் 6-4,4-6,6-2 என்ற கணக்கில் சாகேத் மைனேனி வெற்றிப்பெற்றார்.
இதேபோல் தொடக்க சுற்றில் ஸ்ரீராம் பாலாஜி எகிப்து வீரர் கரீம் முகம்மது மாமுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-4,6-2 என்ற கணக்கில் கரீம் முகம்மது மாமுனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஸ்ரீராம் பாலாஜி.