வருத்தப்படாத வாலிப சங்க தலைவருடன் ஜோடி சேரும் சமந்தா

தமிழ் தொலைக்காட்சியிலிருந்து  கஷ்டப்பட்டு முன்னணி நாயகனாக வந்தவர்தான் சிவகார்த்திகேயன். இவர் தற்போது வேலைக்காரன் படத்தை அடுத்து ஒரு பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வருத்தப்படாத வாலிப சங்கத்தை இயக்கிய பொன்ராம் தான் இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் சமந்தா.

24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் நெப்போலியன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். டி.இமான் இசையமைப்பில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்திற்கு கவிஞர் யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தற்போது சமந்தா இணைந்துள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து படக்குழுவினர் வரவேற்றனர். மேலும் சமந்தா விஜய்யின் மெர்சல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் சமந்தாவிற்கு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் அக்டோபர் 6ஆம் தேதி  திருமணம் நடைபெற உள்ளது. தற்போது சமந்தா நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அதனால் திருமணத்திற்குள் அணைத்து படங்களையும் நடித்து முடிக்க வேண்டும் என்று ஓய்வின்றி நடிக்கிறார்.