5G தொழில்நுட்பத்தில் காலடி எடுத்து வைக்கும் சாம்சங்

samsung

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைவரும் எதிர்பார்க்காத 5G தொழில்நுட்பம் குறித்த அறிவிப்பையும் சாம்சங் நிறுவனம் விரைவில் அறிவிக்கவுள்ளதாம். 5G தொழில்நுட்பம் என்பது அடுத்த ஜெனரேஷனின் புரட்சியாக இருக்கும் என்றும் இந்த நெட்வொர்க் உலகையே தலைகீழாக புரட்டி போடும் அளவுக்கு சக்தி உள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உலகம் முழுவதிலும் உள்ள தங்கள் நிறுவன தொழிற்சாலைகளில் 5G தொழில்நுட்பம் குறித்த பரிசோதனைகள் ஆரம்பித்துவிட்டதாகவும் குறிப்பாக கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இதன் ரிசல்ட் வெற்றிகரமாக வந்துள்ளதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உலகிற்கு 5G தொழில்நுட்ப இண்டர்நெட் நெட்வொர்க் மட்டுமின்றி 5G தொழில்நுட்பத்தில் புதிய பொருட்களும் தயாரிக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது. மேலும் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து எதிர்காலத்தில் மிகவும் ஆச்சரியத்தக்க வகையில் 5G தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.