சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் ட்ரைலர் வெளி வந்தது

சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் ஜீவா, ஸ்ரீ திவ்யா கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் நகைசுவை நாயகனாக பரோட்டா சூரி நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் வைத்து பார்க்கும்போது இது காமெடி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஸ்ரீ திவ்யா ஜீவா ஜோடி சேருவது இதுவே முதல்முறை ஆகும். ஜீவா பொதுவாகவே காமெடி கதாபாத்திரத்தில் நன்றாக நடிப்பார் இப்போது சூரியுடன் சேர்ந்து கலக்கிருக்கிறார். இப்படம் மே 19 ஆம் தேதி வெளியாகயுள்ளது.