ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய சவுதி அரேபியா

SAUDI Arabia has become the first country to grant a robot citizenship

சவுதி அரேபியா தலைநகரமான ரியாத்தில் மனிதனை போல் செயல்படும் ரோபோ ஒன்றிற்க்கு குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது சவுதி அரேபியா அரசு. ரியாத்தில் நவீனத்துவ மாநாடு ஒன்று நடைபெற்றது அங்கு மனிதனை போல் செயல்படும் ரோபோ ஒன்றினை அறிமுகப்படுத்தினர். அந்த ஹியுமனாய்டு ரோபோவிற்கு ‘சோபியா’ என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது அதனோடு சேர்த்து குடியுரிமையும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய முதல் நாடு என்ற பெருமை சவுதி அரேபியாவிற்க்கு கிடைத்துள்ளது.

SAUDI Arabia has become the first country to grant a robot citizenship

ஹாங்காங்கை சேர்ந்த ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் இந்த ரோபோவை 2015ம் ஆண்டில் தயாரித்துள்ளது. இந்த ஹியுமனாய்டு ரோபோவை ‘டேவிட் ஹான்சன்’ தயாரித்துள்ளார். அவர் இதைப்பற்றி கூறுகையில் இந்த ரோபோவுக்கு செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டுள்ளது ஆகையால் இந்த ரோபோவினால் மனிதர்களின் முகத்தை கண்டறிய முடியும். ரோபோவின் “சிலிக்கான் முகம் 62வகையான மனித முக பாவங்கள் வெளிப்படுத்த முடியும்” என்கின்றார் ‘டேவிட் ஹான்சன்’. ரோபோ சோபியா ஆச்சிரியப்படும் வகையில் எனக்கு குடியுரிமை வழங்கி கௌரவித்த சவுதி அரேபியா அரசிற்கு நன்றி என கூறியுள்ளது.

Tagged with:     , ,