ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகிய தவான்

shikhar dhawan will not play australia series

தற்பொழுது இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது அதில் 5ஒருநாள் போட்டிகள் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான முதல் ஒரு நாள் போட்டி வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. தற்பொழுது இரண்டு அணிகளும் கடும் பயிட்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் மூன்று போட்டிக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் தவான் களமிறங்குவதாக இருந்தது.

இன்நிலையில் இதிலிருந்து திடிரென்று தவான் விலகினார். அவர் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன்னை முதல் மூன்று போட்டியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளார். பி.சி.சி.ஐ தாவனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. அவருக்கு பதிலாக புதிய வீரரை பி.சி.சி.ஐ இன்னும் அறிவிக்கவில்லை.

Tagged with:     ,