உலகிலேயே சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது

singpore passport

சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம் உலக நாடுகளில் பாஸ்போர்ட் குறித்த தரவரிசை ஒன்றினை வெளியிட்டுள்ளது. முதல் 10இடம் பிடித்துள்ள நாட்டின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் 159 நடுக்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்ற பெயரோடு 159புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முதல் இடத்திலுள்ளது. 158 புள்ளிகள் பெற்று ஜெர்மனி இரண்டாம் இடத்திலுள்ளது. 157புள்ளிகள் பெற்று சுவீடன், தென்கொரியா மூன்றாம் இடத்திலுள்ளது.

156புள்ளிகள் பெற்று பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், நார்வே,ஜப்பான் ஆகிய நாடுகள் நான்காம் இடத்திலுத்து இடத்திலுள்ளது. இதுபோல முதல் பத்து இடம் பிடித்துள்ள நாட்டின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம். இந்த தரவரிசையில் இந்தியா 75வது இடத்திலுள்ளது. முதல் முறையாக ஆசிய நாடு(சிங்கப்பூர்) ஒன்று முதல் இடத்தை பிடித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.