இனி 3 அல்லது 4 தான் – சிவகார்த்திகேயன் திடீர் அதிரடி

sk speech

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது வேலைக்காரன் என்ற படத்தில் பிஸியாக உள்ளார். மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடீஸ் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடித்திவரும் படமே வேலைக்காரன், இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ்காக அனைவரும் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு திடீர் முடிவெடுத்துள்ளார் இனி வருடத்திற்க்கு 3 அல்லது 4 படங்கள் கொடுக்கவுள்ளதாக முடிவெடுத்துள்ளார். அவரது திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்று கேட்டபொழுது தனது ரசிகர்கள் படம் ரிலீஸ் ஆன பின்பு அடுத்த படத்திற்கு குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்க்காவது காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதால் வருடத்திற்கு 3 அல்லது 4 படங்கள் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்த வருடத்திலிருந்து செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tagged with:     , , ,