சூரிக்காக மதுரை வந்த சிவகார்த்திகேயன்

soori t stall

தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகராக சிறந்து விளங்குபவர் தான் ‘சூரி’. பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த ‘நினைவிருக்கும் வரை’ படம் மூலியமாக சினிமாவில் நுழைந்து தற்பொழுது தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் சூரி. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார். இவர்களிடையே ஒரு தனிப்பட்ட நட்பும் உண்டு.

soori t stall

பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சூரி சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாகவே தனது சொந்த ஊரான மதுரையில் டீ கடை நடத்தி வந்தார். அவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய பின்பும் தொடச்சியாக டீ கடை நடத்தி வந்தார். மதுரையில் ‘அம்மன்’ டீ கடை என்றாலே பேமஸ் தான். தற்பொழுது அவர்க்கு சொந்தமாக ஆறு டீ கடைகள் உள்ளன.

தற்பொழுது தனது தொழிலை சற்று உயர்த்த நினைத்த சூரி தனது அண்ணன் தம்பிகளுடன் இணைத்து காமராஜர் சாலையில் ‘அம்மன்’ சைவ உணவகம் என்று ஒன்றை ஆரம்பித்துள்ளார். மேலும் இந்த திறப்பு விழாவை சிறப்பிக்க நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்.கே.சுரேஷ், தயரிப்பாளர் அன்புச்செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் வருகையை அறிந்து ரசிகர்கள் அப்பகுதியில் கூடினர். இதனால் அந்த இடத்தில் சாலை நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tagged with:     , , ,