சவூதி அரேபியாவில் விமானம் ஓட்டிய 6வயது சிறுவன்

Six Years Old Arabic Child Pilots in Saudi Arabia

சவூதி அரேபியாவில் 6வயது சிறுவன் ஒருநாள் விமானியாக பணியாற்றிய சம்பவம் அனைவரையும் வியக்கவைத்துள்ளது. ‘ஆதம்’ என்ற சிறுவன் விமானத்தை பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளான். அவன் அங்கு விமானி போன்று உடை அணிந்து வந்துள்ளான். எதிகாட் விமானத்தை அவன் இயக்கும் விதத்தை பார்த்து மற்ற விமானிகள் ஆச்சிரியம் அடைந்துள்ளனர். இந்த சிறுவன் பிற்காலத்தில் சிறந்த விமானியாக வருவான் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த 6வயது சிறுவனுடைய கனவு விரைவில் நினைவாகும் என்று விமானிகள் தெரிவித்துள்ளனர். அவன் விமானி போல் உடை அணிந்து மற்றோரு விமானியுடன் எதிகாட் பயிற்சி விமான மையத்தில் உள்ள A380 விமானத்தை அவன் ஓடினான். அவன் விமானத்தை ஒட்டிய விதம் மற்றும் அந்த சிறுவன் இந்த வயதிலேயே விமானத்தை பற்றி தெரிந்து கொண்ட விஷயங்களை கண்டு விமானிகள் வியந்துள்ளனர். அந்த சிறுவனின் விமானம் ஓட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.