விஷால் ரசிகர்களுக்கு இன்று மாலை சிறப்பு விருந்து

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தை விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இப்படத்தில், அனு இம்மானுவேல், வினைய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அருள் கொரோல்லி இசையமைத்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற ஒரு கதை `துப்பறிவாளன்’. ஆகஸ்டு மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீசர் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது. அதுமட்டும்மல்லாமல் துப்பறிவாளன் படத்தின் மேக்கிங் ப்ரோமோ வீடியோ உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.