ஸ்ரீசாந்த் இனி எந்த நாட்டிற்ற்கும் விளையாட முடியாது – பிசிசிஐ அதிரடி

Sreesanth cannot play for any other country: BCCI

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிஙில் ஈடுப்பட்ட காரணத்திற்க்காக பிசிசிஐ ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதித்திருந்தது. சமீபத்தில் உயர் நீதிமன்றம் ஸ்ரீசாந்த் வழக்கிற்க்கு பிசிசிஐ மட்டுமே முடிவெடுக்க வேண்டும் இதில் உயர் நீதிமன்றம் குறுக்கிட முடியாது என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் செய்தியாளரிடம் பேசிய ஸ்ரீசாந்து இந்திய அணியில் தடை விதித்தால் வெளிநாட்டு அணிக்கு விளையாடுவேன் என்று கூறியுள்ளார். பிசிசிஐ ஒரு தனியார் நிறுவனம் நான் வெளிநாட்டிற்கு விளையாடுவதை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். ஐசிசி ஏன் மீது தடை விதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்தின் இந்த கருத்திற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட ஒரு வீரர் வேறு நாட்டிற்கு விளையாடலாம் என்று எந்த விதிமுறையும் இல்லை. விதிமுறை தெரியாமல் ஸ்ரீசாந்த் பேசுவது தவறு என்று பிசிசிஐ கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

Tagged with:     , , ,