உஷார் – வங்க கடலில் மீண்டும் புயல் சின்னம் தமிழகத்திற்கு பாதிப்பு

strom alert

வங்க கடலில் புயல் சின்னம் வலுப்பெற்று வருகிறது நாளை அது கடலோர பகுதிகளை நோக்கி நகர துவங்கும். இதனால் தமிழகம் மற்றும் மற்ற கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி முதல் குஜராத் வரை கோர தணடவமாடிய ‘ஓக்கி’ புயல் இன்று கரையை கடந்துள்ள இந்த நிலையில். தற்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து நாளை தீவர மண்டலமாக வலுவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் சின்னம் நகரும் பொழுது ஏற்படும் கடலின்மேற்பரப்பு ஈரப்பதம் மற்றும் சூழலை பொறுத்து இது புயலாக மாறும் அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடித்து,கனமழை கொட்டி தீர்க்கும் என தெரிவித்துள்ளனர். இந்த புயல் சின்னத்தின் காரணமாக ஒடிசா வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை விடப்படவில்லை. ஆனால் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ‘ஒக்கி’ புயலின் பாதிப்பு அதிகளவில் உள்ளதால் தென் மாவட்ட மக்கள் அடுத்த புயல் வருமோ என அச்சத்தில் உள்ளனர். இது புயலாக மாறினால் மசூலிப்பட்டினம், விஷாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வு மண்டலத்தின் நகர்வை பொறுத்து எங்கு கரைய கடைக்கும் என்பது முடிவாகும்.

Tagged with:     , , ,