ஈராக்கில் தற்கொலை படையினர் தாக்குதல் – 17பேர் பலி

Iraq attack

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 17பேர் பலியாகிவுள்ளனர், மேலும் 28பேர் காயமடைந்துள்ளனர்.

Iraq attack

ஈராக் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் ராணுவப்படையினருக்கும் இடையில் சண்டை நடந்துவருகிறது. இந்த தாக்குதலுக்கு பல அப்பாவி பொதுமக்கள் பலியாகிவுள்ளனர். ஈராக்கின் தலைநகரமான பாக்தாத்திலிருந்து தென் கிழக்கு திசையில் 35கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நஹ்ரவான் மார்க்கெட் பகுதியில் நேற்று காலை 5 தீவிரவாதிகள் உள்ளே நுழைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் 3தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மீதமுள்ள இரண்டு தீவரவாதிகள் தங்களது உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 17பேர் பலியாகிவுள்ளனர் மேலும் 28பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.