தமிழக அரசுக்கு கோரிக்கை – உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்
Posted in: அண்மை செய்திகள்வேலூர் மாவட்டம் அருகே தேவரிஷிகுப்பத்தை சேர்ந்த பால் வணிகர் சேட்டு என்பவர் கடந்த 19ம் தேதி பைக்கில் சென்றபொழுது விபத்துக்குள்ளாகி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மூலம் சென்னை அப்போலோ மருத்துவமனை மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு பொருத்தப்பட்டது. மேலும் இதுபோல் உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.