டியாகோ ஏ.எம்.டி. டாடா அறிமுகம்

டாடா மோட்டார்ஸ், ‘டியாகோ ஏ.எம்.டி’ (Tata Tiago AMT) என்ற புதிய ரக காரை புது டில்லியில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாடா மோட்டார்ஸ் தலைவர் மயங்க் பாரேக் கூறியது:

டியாகோ கார்களுக்கு வாடிக்கையாளர்களிடையே தொடர்ந்து வரவேற்பு பெருகி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு,மேம்படுத்தபட்ட தொழில்நுட்பத்தில் ‘டியாகோ ஏ.எம்.டி (ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்)’ என்ற புதிய ரக காரை டாடா அறிமுகம் செய்துள்ளது.

இப்புதிய வகை காரில், கியர் என்பது ஆட்டோமேட்டிக், நியூட்ரல், ரிவர்ஸ் மற்றும் மேனுவல் ஆகிய நான்கு நிலைகளில் காணப்படும். மேலும், வேகத்தின் உண்மையான அனுபவத்தை வாடிக்கையாளர்கள் உணரும் வகையில், ஸ்போர்ட்ஸ் மற்றும் சிட்டி ஆகிய இரண்டு செலுத்தும் முறைகள் இதில் அமைக்கப்பட்டு உள்ளன.
’டியாகோ ஏ.எம்.டி.’ ரக காரின் புதுடில்லி விற்பனை விலை ரூ.5.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள டாடாவின் 597 விற்பனை மையங்களிலும் இவ்வகை கார்கள் விற்பனைக்கு வரும் என்று கூறினார்.

Tagged with:     ,