தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டர் வெளியீடு

விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தை அடுத்து தற்போது இயக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் நாயகனாக நமது துரை சிங்கம் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ், ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமையா, ரம்யா கிருஷ்ணன், நந்தா துரைராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் கதாநாயகன் தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

இந்நிலையில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று அதாவது சூர்யாவின் பிறந்தநாளான ஞாயிற்று கிழமை வெளியானது. இப்படத்தை இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று படகுழிவினர் தெரிவித்துள்ளனர்.