ஸ்மார்ட் போனில் சில ஷார்ட் கட்கள்: தெரிந்துகொள்ளுங்கள்

இன்றைய உலகில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை. பெரும்பாலானோர்களின் கைகளில் ஸ்மார்ட் போன்கள் அலங்கரிக்கின்றன.

இந்த ஸ்மார்ட் போன்களில் உள்ள சில ஷார்ட்கட்கள்(Short cuts) நமது நேரத்தினை மிச்சப்படித்தி, பெரும் உதவியாக எளிதாக கையாள உதவுகிறது. அவசரகாலங்களில் இவை பெரிதும் பயன்படுகின்றன.

விவரங்கள்

வெளியிடங்களுக்கு செல்லும் போது மொபைல் தொலைந்து விட்டாலோ அல்லது எதிர்பாராமல் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலோ இந்த விவரங்கள் உதவும்.

உங்கள் ஆண்ராய்ட் போனில்(Android mobile) Settings -> Lock Screen -> owner info என்பதை தேர்ந்தெடுத்து அதில் பெயர், தொடர்பு கொள்ளவேண்டிய எண் போன்றவற்றினை பதிந்து வைத்து கொள்ளும் போது அவசர காலங்களில் அது உதவும்.

மேப் பயன்படுத்த(Google Map)

புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் போது Google Map-ல் நாம் போக வேண்டிய இடத்தினை Search செய்து Search bar –ல் Ok maps என க்ளிக் செய்தால் நெட் கனெக்ட் ஆகாத இடங்களில் கூட Map பார்த்து செல்ல இயலும்.

கால்(Call) செய்வதற்கு

சில நேரங்களில் தொடர்ந்து நாம் ஒருவருக்கே கால் செய்யுமாறு நேரலாம். ஒவ்வொரு முறையும் அவர் நம்பரை தேடி எடுத்து செய்யுமாறு இருக்கும்.

அதற்குபதிலாக, மொபைல் போனின் ஸ்கீரினை லாங் ப்ரெஸ்(Long Press) செய்யும் போது வரும் ஷார்கட்ஸ் மெனுவில்(Shortcut Menu) கான்டாக்ட்(Contact)-னை தேர்ந்தெடுத்து அந்த நபரின் எண்ணை பதிவு செய்தால் ஒரு சில நொடிகளில் அவருக்கு கால்(Call) செய்யலாம்.

ஒரே போனில் பல ப்ரோஃபைல்கள்(Profile)

நமது போனை சில நேரங்களில் குழந்தைகள் கையிலோ அல்லது வேறு யாரிடமாவது தர நேரும்போது பாதுகாப்பாக இருக்குமா எனக் கூறமுடியாது.

நம் மொபைல் போனில் ப்ரைவசியை(Privacy) பாதுகாப்பதற்காக ப்ரோஃபைல் ஆப்ஷன்(Profile Option) உதவுகிறது.

இதற்காக நோட்டிபிகேசன் பாரில்(Notification bar) இருக்கும் ப்ரோஃபைல் ஐகானில் Guest என்பதைத் தேர்ந்தெடுத்தால் மற்றவர்களால் புகைப்படம் போன்றவற்றை பார்க்க முடியாது.

இதன் மூலமாக நமது தகவல்களை பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் இத்தகைய வசதியை லாலிபாப் மற்றும் அடுத்த வெர்சனில் மட்டுமே பெறமுடியும்.

டேட்டா அலர்ட்

நாம் அனைவரும் டேட்டா பயன்படுத்துவோம் ஆனால் குறிப்பிட்ட ஜிபி என்ற அளவிற்கே ரீசார்ஜ் செய்து வைத்திருப்போம். அதற்கு அதிகமாக செல்லும் போது பேலன்ஸில் இருந்து பெரும்பகுதி தீர்ந்துவிடும்.

இதனை தடுப்பதற்காக நமது ஸ்மார்ட் போனில் Settings -> Data Usage சென்று ஜிபி அளவினையும் காலம் முடியும் அளவினையும் பதிந்து வைத்தால் அந்த குறிப்பிட்ட அளவு வந்ததும் நமக்கு எச்சரிக்கை அளிக்கப்படும்.

Tagged with:     ,