சுவாதி கொலை வழக்கு படத்தின் ட்ரெய்லர் வெளிவந்தது.

கடந்த ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவம்தின் அடிப்படையில் இந்தப்படம் உருவாக்கப்படுள்ளது. சென்ற வருடம் 24 ஜூன் 2016 அன்று 24 வயது உள்ள சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரியும் சுவாதி என்ற பெண் நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் காலையில் மிக கொடூரமாக கொலைசெய்யப்பட்டார். இந்த செய்தி உலகளவில் பெரும்பரபரப்பை உண்டாக்கியது. இந்த கொலைக்கு காரணமான ராம்குமார் என்ற பையனை கைதுசெய்தனர்.

அதன் பின் ஒரு மாதம் கழித்து அவன் சிறைசாலையில் தற்கொலை செய்துகொண்டான் என்று காவல்துறை வட்டாரம் அறிவித்தனர். அதன் மர்ம பின்னணி என்னவென்று எவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் சுவாதி கொலையை படமாக இயக்க திட்டமிட்டனர். இந்த உண்மை நிகழ்வை மையமாக கொண்டு தயாரிக்கப்படுத்துதான் சுவாதி கொலை வழக்கு என்ற திரைப்படம். இப்படத்தை SD. ரமேஷ் செல்வன் இயக்குகிறார் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.