உலகின் மிக லேசான கைக்கடிகாரம்

கிராபீன்(graphene) என்ற பொருளை கொண்டு உலகின் மிக லேசான வாட்ச் சமீபத்தில் ஜெனீவாவில் வெளியிடப்பட்டது. ரிச்சர்ட் மில்லே(Richard Mille) என்ற வாட்ச் நிறுவனமும், மெக்லாரன் எப் 1(McLaren F1) கார் பந்தய அணியும் இணைந்து இந்த கைக்கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கிராபீனை கண்டுபிடித்ததற்காக மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை(The University of Manchester) சேர்ந்த இரு விஞ்ஞானிகள் 2010ல் நோபல் பரிசு பெற்றனர்.”ஆர்.எம்.50-03 என்ற இந்த கைக்கடிகாரத்தை தயாரிக்க கிராபீன் மற்றும் சில பொருட்களை கலந்து உருவாக்கிய ” கிராப் டி.பி.டி.” (Graph TPT™ )என்ற புதிய பொருளால் மிக லேசான ஆனால் வலுவான பாகங்களை உருவாக்கி இக்கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது” என மான்செஸ்டர் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிச்சர்ட் மில்லெயின் வடிவமைப்பாளர்கள் , பிரபலமான ஒரு பந்தய காரின் ‘ஷாக் அப்சார்ப’ரின் தோற்றம் தந்த உந்துதலில்தான் ஆர்.எம்.50-03  வடிவமைக்கப்பட்டுள்ளது என ஊடகங்களிடம் தெரிவித்தனர். சிக்கலான பாகங்களை கொண்ட இந்த கடிகாரத்தின் எடை 40 கிராம் ஆகும். கிராப் டி.பி.டி. யை வைத்து தயாரிக்கப்பட்ட கடிகாரத்தை சோதிக்க அதன் வெளிபாகம் மற்றும் கைப்பட்டையை கடினமான அதிர்ச்சி கொடுத்தும் நொறுக்கியும் கூட சேதம் அடையவில்லை என மான்செஸ்டர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

For more details click here http://www.manchester.ac.uk/discover/news/worlds-lightest-mechanical-watch-revealed-thanks-to-graphene