துப்பறிவாளன் படத்தின் ட்ரைலர்

Thupparivaalan - Official Trailer | Vishal, Prasanna, Andrea Jeremiah, Anu Emmanuel | Mysskin

துப்பறிவாளன் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி சில மணிநேரங்களிலேயே நிறைய ரசிகர்கள் பார்த்துள்ளனர் இதுமட்டுமின்றி இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டு வருகிறது. யூ டூபில் டிரெண்டிங் நம்பர் 1ஆக உள்ளது. இப்படத்திற்க்கான முன்பதிவு இன்று ஆரம்பமாகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தை விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இப்படத்தில், அனு இம்மானுவேல், வினைய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அருள் கொரோல்லி இசையமைத்திருக்கிறார். பிசாசு, பசங்க 2 மற்றும் இணையதளம் ஆகிய படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளராக பணியாற்றிருக்கிறார்.

இப்படத்திற்க்கான தணிக்கை(சென்சார் ) நேற்று கொடுத்துள்ளனர். இது UA செர்டிபிகேட்டை பெற்றுள்ளது இப்படம் இந்த மாதம் 14ம் தேதி வெளிவர உள்ளது. இதில் புரட்சி தளபதி விஷால் ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவாக நடித்துள்ளார் இவர் நண்பராக பிரசன்னா நடித்துள்ளார்.