சென்னையை மிரட்டும் மழை ரயில்கள் வழக்கம் போல் இயங்குகின்றன

railway track flood chennai

தமிழகத்தில் நேற்று அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் அறிவித்துள்ளது. தற்பொழுது சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சென்னையில் கனமழை பெய்தாலும் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்துள்ளது இதனால் இன்று முதல் இன்னும் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

railway track flood chennai

நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதுமட்டுமின்றி தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, அதை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிப்படையாது என தெரிவித்துள்ளனர்.