கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே தலைமறைவாகவுள்ளது. தமிழகம் முழுவதுமே கந்துவட்டி தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இன்று கோவை கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் 7லட்சம் வாங்கிய கடனுக்கு 76லட்சம் வட்டிகட்டியுள்ளதாக கூறப்பட்டன. அதை கேட்டு போலீஸாருக்கு தலை கிறுகிறுத்துப்போனது.
கோவையை அடுத்துள்ள சவுரிப்பாளையம் அருகே சுப்பிரமணி என்பவர் கந்துவட்டி தொழில் செய்து வருகிறார். அவரிடம் குருராசன், மணிகண்டன், பூபதி, கார்த்திகேயன், சரத்குமார் ஆகிய ஐந்து பேர் தொழில் தொடங்குவதற்காக கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். வாங்கிய பணத்தை விட பல மடங்கு கொடுத்துள்ளனர். இருந்தாலும் சுப்பிரமணி அவர்களிடம் விடாமல் பணம் கேட்டு கொண்டிருப்பதாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து மணிகண்டன் கூறியதாவது ‘ நானும் என் நண்பர்களும் சேர்ந்து தொழில் ஆரம்பிப்பதற்காக நிலப் பத்திரத்தை வைத்து 7லட்சம் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். அதற்க்கு வட்டியாக இதுவரை 76லட்சம் கட்டியும் மேலும் சுப்பிரமணி 20லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.