வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் டீஸர் வெளியானது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. இப்படம் 18 ஜூலை 2014 அன்று வெளியானது. இப்படத்தில் அமலா பால், சரண்யா பொன்வண்ணன், விவேக் மற்றும் சமுத்திரக்கனி என பலர் நடித்தனர். இப்படம் வெளியான சில தினங்களிலே 530 மில்லியன் INR வரை வசூலை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இளங்கர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் தற்போது வேலையில்லா பட்டதாரி படத்தின் பாகம் 2 தயாரிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். நேற்று இப்படத்தின் டீஸர் இணையத்தளங்களில் வெளியானது. முதல் பாகத்தில் நடித்த அனைவரும் 2ஆம் பாகத்திலும் நடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஹிந்தி நடிகை கஜோல் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷின் Wunderbar Films நிறுவனத்தால் இப்படம் விநியோகிக்கப்படுகிறது. சீன் ரோல்டன், அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் இந்த படத்திற்கு இசை அமைக்கின்றனர்.