வெங்கட் பிரபுவின் அடுத்த படம் ‘பார்ட்டி’ ஆரம்பமானது

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, வசூல் ரீதியாகவும் நல்லபடியாக அமைந்தது. இந்நிலையில், வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் `பார்ட்டி’. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்க இருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா மற்றும் சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.