நடன இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திற்க்கு நன்கொடை வழங்கிய விஜய் – எவ்வளவு தெரியுமா?

vijay gave donation

நடிகர் விஜய் பிறருக்கு உதவி செய்யும் மனம் உடையவர். இதற்க்கு முன்பாக தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள் 10 பேருக்கு தலா 5லட்சம் ஒருமுறை வழங்கினார். தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்திற்க்கு 15லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். இதுபோன்று பல்வேறு அமைப்புகளுக்கு நன்கொடைகள் அவர் வழங்கியுள்ளார். அதனடிப்படையில் தற்பொழுது மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது நடன இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திற்க்கு 15லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். இது போன்று ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நன்கொடை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நடிகர் விஜய் நன்கொடை வழங்குவதை வெளியிடக்கூடாது என்பது அவரது வேண்டுகோள். ஆகையால் பல்வேறு அமைப்புகள் அவர் நன்கொடை வழங்கிய செய்திகளை வெளியிடவில்லை. நடன இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சினிமா தொடர்புடையதால் தற்பொழுது அவர் நன்கொடை வழங்கியுள்ள இந்த செய்திகள் வெளியாகிவுள்ளன.

Tagged with:     , , , ,