விஜய்யின் 61-வது படத்தின் தலைப்பு மெர்சல்

இளையதளபதி விஜய்யின் 43-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த 61வது படத்தின் தலைப்பு “மெர்சல்” என்று படக்குழுவினர் வெளியிட்டனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் N. ராமசாமி தயாரிக்கிறார் மற்றும் A. R. ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தினை அட்லீ இயக்குகிறார் அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே விஜய் வைத்து அட்லீ தெறி படத்தை இயக்கினார். விஜய் அட்லீ கூட்டணி சேர்வது இரண்டாவது முறையாகும்.

மேலும் இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கிறார் அதன் முதல் தோற்றம் அவரது பிறந்தநாளான இன்று வெளியானது. இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்திய மேனன், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் ஜூலை மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதியில் தீபாவளியன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.