விராட் கோலியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் கைது

virat kholi century

இந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கான்பூரில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 337 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணி 331குவித்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.

virat and rohit century

விராட் கோலி சதம் அடித்த பொழுது அவரது ரசிகர் ஒருவர் உற்சாகத்தில் மைதானத்துக்குள் கோலியை நோக்கி ஓடி வந்தார். உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர் தூக்கி சென்றனர். போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது மைதானத்திற்குள்ளே நுழைந்ததால் கிரிக்கெட் விதிகளை மீறுவதற்கு சமம் என்ற அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். பிறகு அவரை விசாரித்த பொழுது கோலியை ஆர்வத்துடன் கட்டிப்பிடிக்க வந்ததாக அவர் கூறியுள்ளார் அதன்பின் அவர் விடுவிக்கப்பட்டார்.

Tagged with:     , , ,